Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி திட்டம்?

Sekar Updated:
இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி திட்டம்?Representative Image.

இந்தியப் பதிவாளர் ஜெனரல் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த தரவுத்தளத்தை பராமரிக்கவும், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை (NPR) புதுப்பிக்கவும் அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1969 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் திருத்தும் மசோதாவின் வரைவு கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளுக்காக வெளியிடப்பட்டிருந்தது.

முன்மொழியப்பட்ட அந்த மசோதாவின்படி, வாக்காளர் பட்டியல்கள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் புதுப்பிக்க இந்த தரவு பயன்படுத்தப்படும். அதாவது அரசின் ஆவணங்கள் அனைத்திற்கும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டில் உள்ள சான்றிதழ் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்துவது இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்த நோக்கத்திற்காக, வரைவு மசோதா, மாநில அளவில் சிவில் பதிவுகளின் ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தளத்தை பராமரிக்கவும், பதிவாளர் ஜெனரலால் பராமரிக்கப்படும் தேசிய அளவிலான தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்கவும் தலைமைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் வகையில் பிரிவு 4 இல் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

குடிமக்கள் மற்றும் வீட்டுத் தலைவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய தகவல்களை வழங்குவதற்கான தேவைகளைக் கையாளும் பிரிவு 8 இல் திருத்தங்களையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.  மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் கிடைத்த பிறகு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கு ஒரு வார கால அவகாசத்தை நிர்ணயம் செய்து பிரிவு 12 க்கு திருத்தம் செய்ய முன்மொழிந்துள்ளது.

அதே போல் வரைவு முன்மொழிவு, மருத்துவ நிறுவனங்கள் இறப்புக்கான காரணம் குறித்த சான்றிதழைப் பதிவாளருக்கு வழங்குவதும், பரிந்துரைக்கப்படும் படிவத்தில் அருகிலுள்ள உறவினருக்கு ஒரு நகலையும் வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்