Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடிப்பிறப்பை முன்னிட்டு.. ஒகேனக்கல்லில்.. ஏமாற்றமடைந்த மக்கள்!!

Sekar July 17, 2022 & 10:54 [IST]
ஆடிப்பிறப்பை முன்னிட்டு.. ஒகேனக்கல்லில்.. ஏமாற்றமடைந்த மக்கள்!!Representative Image.

தமிழர்களின் விஷேஷ தினங்களில் ஒன்றான ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று ஒகேனக்கல்லில் நீராட வந்த பொதுமக்களுக்கு சோகமே மிஞ்சியது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை நிலவரப்படி காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 1,05,000 கன அடியாக இருந்து வந்த நிலையில் அது தற்போது 1,20,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெள்ளம் போல் பெருக்கெடுத்து வரும் நீர் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, மெயின் அருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்துள்ளன. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் செல்வதற்கு 8வது நாளாக மாவட்ட நிர்வாகத்தால் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழர்களின் விஷேஷ தினங்களில் ஒன்றான ஆடிப் பிறப்பன்று ஏராளமானோர் ஒகேனக்கலில் நீராடுவது வழக்கம். ஆனால் தற்போது காவிரியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்