Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி நடவடிக்கை பாயும்.. ஊழியர்களுக்கு தமிழக அரசு வார்னிங்!!

Sekar [IST]
இனி நடவடிக்கை பாயும்.. ஊழியர்களுக்கு தமிழக அரசு வார்னிங்!!Representative Image.

அரசு அலுவலங்களில் முறைகேடு செய்யும் ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், "அரசு ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, ஏற்கனவே தமிழக அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் பல சமயங்களில் அரசு ஊழியர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படுவதில்லை.

எனினும் அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், அதே முறைகேடு தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகையால் முறைகேடில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது.

அதன்படி அரசு ஊழியர் முறைகேட்டில் ஈடுபட்டு அது குற்ற வழக்காக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், துறை ரீதியான நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தப்படலாம். குற்ற வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு எந்த வகையிலும் துறை ரீதியான முடிவை பாதிக்காது. எனவே, தீர்ப்பு வரட்டும் என காத்திருக்க தேவையில்லை.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்போது, அனைத்து ஆவணங்களையும் போலீசார் எடுத்து சென்றாலும், துறை ரீதியான நடவடிக்கைக்கு, அந்த ஒரிஜினல் ஆவணங்களின் நகலை வாங்கி, நடவடிக்கையை தொடரலாம். மேலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆஜராகவில்லை என்றாலோ அல்லது எழுத்துப்பூர்வமான அறிக்கை தராவிட்டாலோ, அரசு விதிகளுக்கு கீழ்படிய மறுத்தாலோ, எக்ஸ்பார்ட்டி உத்தரவை, விசாரணை அதிகாரி பிறப்பிக்கலாம். 

அதே சமயத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஊழியரை டிஸ்மிஸ் செய்வது போன்ற பெரிய முடிவை மட்டும், குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கலாம். எனினும் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அந்த ஊழியரை விசாரிக்க முடியாது என்று எடுத்து கொள்ளக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பு துறை ரீதியான விசாரணை முடிவை பாதிக்காது.

ஆகவே முறைகேடு செய்த ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரி மீது இனி நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்