Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rain Update : கொட்ட போகுது கனமழை..! உஷாரா இருங்க..!

Muthu Kumar June 10, 2022 & 14:59 [IST]
Rain Update : கொட்ட போகுது கனமழை..! உஷாரா இருங்க..!Representative Image.

Rain Update : தமிழகத்தில் சில மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் எனவும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்