Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறை....?

madhankumar June 10, 2022 & 14:53 [IST]
போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறை....?Representative Image.

தமிழக அரசு போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் கூறியிருப்பதாவது:- அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் கருவி மூலம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படுகிறது. 

தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை பணிமுடிந்து செல்லும்போதும் பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்துவிட்டு செல்லவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர், நடத்துநர், பேருந்து தடத்தில் செல்வதற்கு பணிமனை வாயிலிருந்து புறப்படும் பொழுது சோதனை முறையில் பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும். பேஸ்புக் அடிப்படையில் பயோமெட்ரிக் சிஸ்டம் வருகைப் பதிவு முறை மேம்படுத்தப்படும். 

போக்குவரத்துத் துறையில் புதிதாக பணியாளர்கள் பணிமனையில் சேர்ந்தாலும் அவர்களுடைய பெயரையும் உடனடியாக பயோமெட்ரிக் முறை வருகை பதிவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்