Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வெள்ளக் காடாக மாறிய பெங்களூர்..! தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி.. | Heavy Rains in Bengaluru

Gowthami Subramani Updated:
வெள்ளக் காடாக மாறிய பெங்களூர்..! தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி.. | Heavy Rains in BengaluruRepresentative Image.

கடந்த சில நாள்களாகவே, பெங்களூரில் அதிக அளவிலான கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியுறுகின்றனர். மேலும், பலத்த காற்று வீசுவதன் காரணமாகவும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் வேரோடு சாய்ந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெங்களூருவில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது. பெங்களூரு மக்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில், மழையின் போது சேகரித்த ஆலங்கட்டி மழையின் படங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவே, கர்நாடகா தலைநகர் பெங்களூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதாகக் கூறப்படுகிறது. பெங்களூரு விதான சவுதா, மெஜஸ்டிக், ரேஸ் கோர்ஸ், டவுன்ஹால், மைசூர் வங்கி வட்டம், ஜெய நகர், மல்லேஸ்வர், ஆனந்த் ராவ், கே.ஆர்.சர்க்கிள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ளது

இதனால், ஒரு சில இடங்களில் மரணமும் நிகழ்ந்துள்ளது. விதான சவுதா அருகே 6 பேர் கொண்ட குடும்பம் தண்ணீரில் சிக்கி, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாலையோரம் நின்று கொண்டிருந்த மழையின் காரணமாக பல்லக்கில் சிக்கிய கார் ஒன்றில் இருந்து அந்தப் பெண் மரணமடைந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்