Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாதுகாப்பு சோதனைகளுக்காக MiG 21 போர் விமானம் தரையிறக்கம் | Indian Air Force grounds MiG-21 Fleet

Priyanka Hochumin Updated:
பாதுகாப்பு சோதனைகளுக்காக MiG 21 போர் விமானம் தரையிறக்கம் | Indian Air Force grounds MiG-21 FleetRepresentative Image.

கடந்த மே 8-ம் தேதி MiG-21 Bison போர் விமானம் பறக்கும் போது செயலிழந்ததால் ஹனுமன்கரில் உள்ள வீட்டின் மீது மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

மே 8, 2023 அன்று சூரத்கர் விமானப்படை நிலையத்தில் இருந்து புறப்பட்ட MiG-21 Bison போர் விமானம் சிறிது நேரத்திலேயே விமானி அவசரநிலையை எதிர்கொண்டார் மற்றும் விமானத்தை மீட்க முயன்றார். ஆனால் எவ்ளோ முயன்றும் அதனை சரிசெய்ய முடியவில்லை. எனவே, ஹனுமங்கரில் உள்ள பஹ்லோல் நகர் பகுதியில் ஒரு வீட்டின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மூன்று பெண்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதில் பயணித்த விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, சூரத்கர் தளத்திலிருந்து வடகிழக்கே சுமார் 25 கிமீ தொலைவில் மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து MiG-21 போர் விமானத்தை பாதுகாப்பு சோதனைகளுக்காக தரையிறக்கியுள்ளது இந்திய விமானப்படை. இது ஒன்று புதிதல்ல கடந்த சில வருடங்களாகவே இந்த விமானத்தால் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களில் 200 விமானிகளின் உயிரைப் பறித்த விபத்துக்களில் 400 க்கும் மேற்பட்ட MiG-21 போர் விமானம் காரணமாக இருந்துள்ளது.

இனிமேல் MiG-21 போர் விமானத்தால் உயிரிழப்பு நேர கூடாது என்று வரும் 2025-க்குள் படிப்படையாக MiG-21 பைசனை அகற்ற இந்திய விமானப்படை தீர்மானம் செய்துள்ளது. இந்த தகவல் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம்  MiG-21 போர் விமானத்தின் புனைப்பெயர் "பறக்கும் சவப்பெட்டிகள்" என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்