Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரிசிகொம்பன் யானை கேரளாவிற்கு அனுப்ப மறுப்பு – உயர்நீதிமன்றம்..!

Baskaran Updated:
அரிசிகொம்பன் யானை கேரளாவிற்கு அனுப்ப மறுப்பு – உயர்நீதிமன்றம்..!Representative Image.

சென்னை: அரிசி கொம்பன் யானையை கேரளாவிற்கு அனுப்ப வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் புகுந்த அரிசிக்கொம்பன் யானை அங்குள்ள மக்களை அச்சுறுத்தியும், உடமைகளை சேதப்படுத்தியும் வந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த யானையை பிடிக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

பலக் கட்ட போராட்டங்களுக்கு பிறகு அரிசி கொம்பனை யானை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை கும்கி யானை உதவியோடு களக்காடு முண்டந்துறை வனச்சரகத்தில் விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுமோ என்ற அச்சமும்,அப்படியே கேரள வனப்பகுதிக்குள் சென்று விடமோ என்ற உணர்வும், நெல்லை, குமரி மாவட்ட மலைகிராம மக்களை வாட்டி வைத்து வருகிறது.

இந்நிலையில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ள அரிசிகொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்குள் வரவாய்ப்பில்லை. மேல்கோதையாறு பகுதியில் தான் சுற்றி வருகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முத்துக்குழிவயல், குற்றியார் பகுதியில் தேவையான உணவு, தண்ணீர் கிடைப்பதாகவும், யானை ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இப்படி அதிகாரிகள் கூறினாலும், வனவிலங்கு ஆர்வலர்கள் நம்பவில்லை. ஒருநாளைக்கு 40முதல் 50கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கும் அரிசிக்கொம்பன் யானை, தற்போது 6கிலோ மீட்டர் தூரம் வரை தான் நடக்கிறது என்றும், கால் மற்றும் தும்பிக்கையில் காயம் இருப்பதால் தான் நடக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அரிசி கொம்பன் யானைக்கு முண்டந்துறை சரணாலயத்தில் போதிய தண்ணீர் வசதியின்றி தவிப்பதால், கேரள மாநிலம் மதிகெட்டான் தேசிய பூங்காவில் விடுவது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ரெபெக்கா ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் யானையை மதிகெட்டான் தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்