Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

‘சிறுமி குடும்பத்திற்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது’ - சாக்சி மாலிக் கருத்து..!

Surya Updated:
‘சிறுமி குடும்பத்திற்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது’ - சாக்சி மாலிக் கருத்து..!Representative Image.

பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு நீக்கப்பட்டதற்கு, சிறுமியின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளின் புகாரின் பேரில் பாஜக எம்.பி மீது வழக்கு பதிந்திருந்த டெல்லி போலீசார், நேற்று அங்குள்ள ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் பெண்ணை மானபங்கப்படுத்துதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளதாகவும், அதேநேரத்தில் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாக்ஷி மாலிக், இளம் வீரங்கனையான சிறுமியின் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியே, பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு நீக்கப்பட காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். சிறுமி மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்திருந்த போதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், போக்சோ வழக்கை திரும்ப பெறும் நிலை ஏற்பட்டிருக்காது என்று சாக்‌ஷி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மேலும் பல வீராங்கனைகள் புகார் அளிக்க முன்வந்திருப்பார்கள் என்றும் அப்போது கூறினார். தங்களது பிற கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிய பிறகு இப்பிரச்சனையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்