Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூத்துக்குடி டிஎம்பி வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை

Baskarans Updated:
தூத்துக்குடி டிஎம்பி வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை Representative Image.

தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகளைக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்படுகின்றது.

இந்நிலையில் வி இ சாலையில் உள்ள இரண்டு இடத்தில் செயல்பட்டு வரும் தலைமை அலுவலகத்தில் இன்று காலை வழக்கமான வங்கி அலுவல் பணிகள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மதுரை நெல்லை தூத்துக்குடி வருமானத்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் திடீரென உள்ளே புகுந்து வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர்.  

இந்த சோதனை இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சோதனை எதற்காக நடைபெறுகின்றது என்றுஉறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கணக்குகள் தொடர்பாகவும் மற்றும் அவர் சார்ந்த பினாமிகளின் கணக்குகள் தொடர்பாகவும் மேற்படி சோதனை நடைபெறுவதாக ஒரு தரப்பும் தற்போது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணியாளர் சேர்க்கை நடைபெறுவதாகவும், அதில் பணம் பெற்றுக் கொண்டு காலி பணியிடங்களை நிரப்புவதாக வந்த தகவல்களை அடுத்தும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக மற்றொரு தரப்பும் குறிப்பிட்ட துறை வட்டாரத்தில் இருந்து தகவல்களை தெரிவித்துள்ளது. இச்சோதனை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்