Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காரைக்காலில் களைக்கட்டிய மாங்கனி திருவிழா

Baskarans Updated:
காரைக்காலில் களைக்கட்டிய மாங்கனி திருவிழாRepresentative Image.

காரைக்கால் மாங்கனி திருவிழாவில் மாங்கனிகளை பக்தர்கள் இறைத்து வழிப்பட்டனர்.

உலகபுகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவை காண உள்ளுர் மட்டுமல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபடுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான சப்பரம் செல்லும் நிகழ்வு காரைக்காலில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வேதபாராயணம் முழங்க, சிறப்பு மேளம், ராஜவாத்தியங்கள் முழங்க உலா வந்தது.

அப்போது வீட்டின் மொட்டை மாடிகளில் நின்ற பக்தர்கள் மாங்கனிகளை வாரி இரைத்தனர். திருமண தடை, குழந்தை பாக்கியம், வேண்டுதல் நிறைவேற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக பக்தர்கள் மாங்கனிகளை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அவ்வாறு வீசப்படும் மாங்கனிகளை கீழ் நிற்கும் பக்தர்கள் பிடித்து இறைவனின் பிரசாதமாக நினைத்து வீட்டிற்கு கொண்டு சென்றனர். மேலும் அர்ச்சனை தட்டில் பட்டு வஸ்திரம், மாங்கனிகள் வைத்து பிச்சாண்டவரை வழிப்பட்டனர். காரைக்கால் நகரின் பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதகோவில் வீதி, லெமேர் வீதி வழியாக பவலக்கால் சப்பரம் மாலை அம்மையார் கோவிலை சென்றடைந்ததும், புனிதவதியார், பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைக்கும் வைபவம் நடத்தப்பட்டு அமுதுபடையல் வழிபாடு நடத்தப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்