உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பொது முடக்கம் காரணமாக ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், வேலையின்றி வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள் தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாமல் மாற்று சான்றிதழை பெற்று அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்த வருடம் அரசு பள்ளிகளில் கடந்த 2 வருடங்களாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதன்படி, 72 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதனால், அரசு பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கையை தக்க வைத்துக்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தி பள்ளிகளுக்கு தேவையான அடிப்படையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…