Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்பு...இந்தியாவிற்கு முதலிடம்.!

madhankumar May 18, 2022 & 14:20 [IST]
காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்பு...இந்தியாவிற்கு முதலிடம்.!Representative Image.

அமெரிக்காவை சேர்ந்த தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழ் சார்பில் நடத்தப்பட்ட காற்று மாசு உயிரிழப்பு குறித்த ஆய்வில் பல்வேறு வகையான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, உலக அளவில் ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள், மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் உயிரிழப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் தொழில்சாலைகளில் இருந்து வெளிவரும் அசுத்தமான காற்றுகள்  காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்ததை விட 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசம், எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டின் காரணமாக 1,42,833 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவும், சீனாவும் காற்று மாசுபாடு ஏற்படுவதால் நிகழும் உயிரிழப்பில் உலகில் முன்னணியில் உள்ளன.  இதில் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் 16.7 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாகவும், இது அந்த ஆண்டில் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கையில் 17.8 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உயிரிழப்புகளில் 9.8 லட்சம் இறப்புகள் அசுத்தமான காற்றை சுவாசித்ததன் மூலம் ஏற்பட்டதாகவும், எஞ்சிய 6.1 லட்சம் இறப்புகள் வீட்டில் சமையல் அறையில் இருந்து வெளியேறும் புகையால் ஏற்பட்டது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே சமயம் புருனே, கத்தார் மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை குறைந்த காற்று மாசு இறப்பு விகிதங்களை கொண்டுள்ளன. 

மேலும் இந்த காற்று மாசினால் மட்டுமல்லாமல் சிகரெட் புகைப்பதனால் கூட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் உயிரிழப்புகளில் வழங்கப்படும் இறப்பு சான்றிதழ்களில் காற்றுமாசினால் உயிரிழப்பு என குறிப்பிடாமல், பக்கவாதம், மாரடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்ததாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்