Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோதுமை ஏற்றுமதியை நிறுத்த இந்தியா முடிவு...உலக நாடுகள் எதிர்ப்பு..!

madhankumar May 15, 2022 & 11:51 [IST]
கோதுமை ஏற்றுமதியை நிறுத்த இந்தியா முடிவு...உலக நாடுகள் எதிர்ப்பு..!Representative Image.

நாட்டில் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஏற்றுமதியை நிறுத்தி வைப்பது மூலம் அத்தியாவசிய உணவு தானியங்களில் ஒன்றான கோதுமை விலையை குறைக்க முடியும் என அரசு கருதுகிறது. இந்தாண்டில் ஒரு கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த முடிவிற்கு ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஜி7 விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ள விவசாய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எல்லா நாடுகளும் உள்நாட்டு உணவு பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்றுமதியை நிறுத்தினால் உலகளவில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் என ஜெர்மனி விவசாய அமைச்சர் கெம் ஆஸ்டெமிர் தெரிவித்தார்.

உலக அளவில் உக்ரைனும் ரஷ்யாவும் கோதுமை ஏற்றுமதியில் முக்கிய பங்குவகித்தனர். ஆனால் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போரின் காரணமாக ஏற்றுமதியை நிறுத்திவிட்டதால் பல நாடுகளில் அத்தியாவசிய உணவு தானியமான கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தை நிரப்ப இந்தியா முன் வந்த நிலையில் தற்போது உள்நாட்டு சூழலை கருத்தில் கொண்டு ஏற்றுமதியை நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ்ந்தியா கோதுமை ஏற்றுமதியை நிறுத்தியது போல் இ்ந்தோனோஷியா பாமாயில் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளது. இதே போன்ற முடிவை வேறு சில நாடுகளும் எடுத்துள்ளதால் உலகெங்கும் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்