Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை..!

madhankumar May 14, 2022 & 19:58 [IST]
ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை..!Representative Image.

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 80 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படையெடுப்பிற்கு உக்ரைன் நேட்டோவில் இணைய இருந்ததே காரணம் என கூறப்படுகிறது. இந்த உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளதால் அஞ்சிய  ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பாதுகாப்புக்காக நேட்டோவில் இணையப்போவதாக கூறி வருகின்றன.

இரண்டு நாடுகளும் ஓரிரு வாரங்களில் நேட்டோவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு ரஷியா மூலம்  ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் நேட்டோ படைகள் ஓர் ஆண்டுகள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில் தங்களுடைய அச்சுறுத்தலுக்காக இரு நாடுகளும் நேட்டோவில் இணைவதாக கூறுவது உண்மையான காரணம் போல தோன்றவில்லை என ரஷிய வெளிநாட்டு மந்திரி அலெக்சாண்டர் குருஷ்கோ தெரிவித்துள்ளார். மேலும் ரஷியாவிற்கு ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுடன் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு எதிரான விரோத நோக்கங்களும் எங்களுக்கு இல்லை. இந்த நிலையில் அச்சுறுத்தலுக்கு பயந்து இரு நாடுகளும் நேட்டோவில் இனைவது உண்மை என்று தோன்றவில்லை.

ஒருவேளை நேட்டோ ரஷிய எல்லைகளில் அணு ஆயுதங்களை கொண்டு வந்து நிறுத்தினால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வோம். அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என  கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரஷியா ஃபின்ன்லாந்துக்கு அளித்து வரும் மின்சார விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக ஃபின்லாந்து மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்