Mon ,Nov 11, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Corona Situation : இந்திய கொரோனா நிலவரம்..! தடுப்பூசி நிலவரம்..?

Muthu Kumar May 28, 2022 & 10:10 [IST]
Corona Situation : இந்திய கொரோனா நிலவரம்..! தடுப்பூசி நிலவரம்..?Representative Image.

Corona Situation : இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்தும் அதிகரித்தும் வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,685 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்..?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 2,124 ஆக இருந்த நிலையில், இன்று 2,685 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,31,50,215 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 2,158 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி, இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,609,335 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 5,24,572 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,308 ஆக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி நிலவரம்..?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,39,466 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1,93,13,41,918 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்