Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம்.. 5வது கல்வாரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பல் இணைப்பு!!

Sekar Updated:
இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம்.. 5வது கல்வாரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பல் இணைப்பு!!Representative Image.

கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் ஐந்தாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாகீர் இன்று மும்பையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் வாகீர் இந்திய கடற்படையின் ஐஎஸ்ஆர் திறன்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸிலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் மும்பையில் மேசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் இந்த கப்பல் கட்டப்பட்டது. இதையடுத்து இன்று ஐஎன்எஸ் வாகீர் கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர் ஹரி குமார் கலந்து கொண்ட விழாவில் முறைப்படி இயக்கப்பட்டு, இந்திய கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்ட ஒரு அறிக்கையில், "இந்த நீர்மூழ்கிக் கப்பல், எதிரிகளைத் தடுப்பதில் இந்தியாவின் கடல்சார் நலன்களை மேலும் மேம்படுத்துவதற்கும், நெருக்கடி காலங்களில் தீர்க்கமான எதிர்ப்பை வழங்க உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு (ISR) ஆகியவற்றை மேற்கொள்வதற்கும் இந்திய கடற்படையின் திறனை அதிகரிக்கும்." என்று தெரிவித்துள்ளது.

'வாகீர்' என்றால் மணல் சுறா, ரகசிய செயல்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. நீர்மூழ்கிக் கப்பலின் நெறிமுறைக்கு ஒத்த இரண்டு குணங்களை கொண்ட பெயரே இந்த கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் வாகீர் ஆனது உலகின் சிறந்த சென்சார்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது. வாகீரின் ஆயுதப் கட்டமைப்பில் போதுமான வயர்-கைடட் டார்பிடோக்கள் மற்றும் ஒரு பெரிய எதிரி கடற்படை கப்பலை வீழ்த்துவதற்கு தேவையான துணை மேற்பரப்பு முதல் மேற்பரப்பு ஏவுகணைகள் ஆகியவை அடங்கும் என்று கடற்படை மேலும் கூறியது.

நீர்மூழ்கி கப்பல் சிறப்பு நடவடிக்கைகளுக்காக கடல் கமாண்டோக்களை ஏவக்கூடிய திறன் கொண்டது, அதே நேரத்தில் அதன் சக்திவாய்ந்த டீசல் என்ஜின்கள் ஒரு ரகசிய பணிக்காக விரைவாக பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியும் என்று கடற்படை மேலும் கூறியது.

தற்காப்புக்காக, இது ஒரு அதிநவீன டார்பிடோ டிகோய் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், ஐஎன்எஸ் வாகீர் இணைக்கப்பட்டுள்ளது இந்திய கடற்படைக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்