Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐஎன்எஸ் விக்ராந்த்.. புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார் மோடி!!

Sekar September 02, 2022 & 13:07 [IST]
ஐஎன்எஸ் விக்ராந்த்.. புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார் மோடி!!Representative Image.

கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பின்னர் அவர் புதிய கடற்படைக் கொடியை (நிஷான்) வெளியிட்டார். முன்பு கொடியில் பிரிட்டிஷ் காலனித்துவ அடையாளமான சிவப்பு சிலுவை இருந்த நிலையில், அவை தற்போது முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (WDB) வடிவமைக்கப்பட்டது மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது, விக்ராந்த் அதிநவீன ஆட்டோமேஷன் அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இது பெரிய அளவிலான உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டுள்ளது, இதில் நாட்டின் முக்கிய தொழில்துறை நிறுவனங்கள்- BEL, BHEL, GRSE, Keltron, Kirloskar, Larsen & Toubro, Wartsila India போன்றவை மற்றும் 100 க்கும் மேற்பட்ட MSMEகள் பங்கேற்றிருந்தன. விக்ராந்த் இயக்கப்படுவதன் மூலம், இந்தியாவில் இரண்டு செயல்பாட்டு விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கும். இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும்.

1971 போரில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் நினைவாக, தற்போது இந்தியாவின் முதல் சுதேசி விமானம் தாங்கி கப்பலுக்கு அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் கூற்றுப்படி, 262 மீட்டர் நீளமுள்ள கப்பல் 45,000 டன் எடையைக் கொண்டுள்ளது. இது முந்தையதை விட மிகப் பெரியது மற்றும் மேம்பட்டது.

விக்ராந்துடன், இந்தியா ஒரு விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கும் திறன் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சீனா) பட்டியலில் இணைந்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALH) மற்றும் இலகுரக போர் விமானங்கள் (MIG-29K போர் விமானங்கள், Kamov-31, MH-60R மல்டி-ரோல் ஹெலிகாப்டர்கள்) ஆகியவற்றை உள்ளடக்கிய 30 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவு இந்த கப்பலில் செயல்படும் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்