Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண் அதிகாரிகள் சேலை கட்ட கற்றுக்கொள்ளுங்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு! 

KANIMOZHI Updated:
பெண் அதிகாரிகள் சேலை கட்ட கற்றுக்கொள்ளுங்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு! Representative Image.

பெண் அதிகாரிகள் சேலை கட்ட கற்றுக்கொள்ளுங்கள், இந்திய குடிமை பணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் சமூக போராளிகளாக இருக்க கூடாது, ஒன்றிய அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

 

இந்திய குடிமைப் பணிகளில் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு ஆளுநர் தரப்பில்  எண்ணித் துணிக என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்வுக்கு காத்திருக்கும் மாணவர்களுடன்  ஆளுநர் கலந்துரையாடினார்.

 

அப்போது பேசிய அவர்: உங்களது அறிவு திறன் எழுத்து தேர்வில் நிரூபிக்கபட்டு உள்ளது  இந்த நேர்முக தேர்வு உங்களது ஆளுமையை சோதிக்கபோகிறது என்றும்குடிமை பணிக்கு முக்கியமானது மக்களுடன் சிரித்த முகத்துடன் பழகுவதுதான்.

 

குடிமை பணியாளர்களுக்கு உடை மிகவும் முக்கியமான ஒன்றாகும் அதனால்,பெண் அதிகாரிகள் சேலை கட்ட தெரிவில்லை என்றால் சேலை கட்ட கற்று கொள்ளுங்கள். ஆண்கள் நல்ல கோட் சூட் தைத்து கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார். 

 

மேலும், செய்திதாள்களில் வரும் செய்திகள் ஒருவரின் பார்வையாக இருக்கலாம். புத்தகங்ககளில் இருக்கும் கருத்துகள் ஒருவரின் பார்வையாக இருக்கலாம் அதை நீங்கள் ஏற்று கொள்ள கூடாது. அதிகாரப்பூர்வமான அறிவுப்பூர்வமான ஆதாரப்பூர்வமான உண்மையை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டும். அதனுடன் இந்திய குடிமை பணியில் சமூக போராளிகளுக்கு இடமில்லை இங்கு மக்களுக்கு குடிமை பணி செய்பவர்கள்தான் மட்டும்தான் தேவை.

 

மேலும் ,குடிமை பணிகளில் செயல்படுவர்கள் ஒன்றிய அரசால் தேர்ந்து எடுக்கப்படுக்கவர்கள் அவர்கள் எபோதும் ஒன்றிய அரசு பக்கம் தான் இருக்க வேண்டும் மாநில அரசு பக்கம் இருக்க கூடாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்