Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

அட.. இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்தியாவோடு இப்படியொரு கனெக்ஷனா?

Sekar July 23, 2022 & 10:11 [IST]
அட.. இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்தியாவோடு இப்படியொரு கனெக்ஷனா?Representative Image.

இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் குணவர்தன குறித்து ஊடகங்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றன. இதற்கு காரணம் அவர் மட்டும் அல்ல. ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் காலனித்துவ எதிர்ப்பு பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருந்த அவரது தந்தை டான் பிலிப் ரூபசிங்க குணவர்தன தான் ஊடகங்கள் அவரைப் பற்றி பேச வைத்தது.

இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 17 அமைச்சர்களுடன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 

ராஜபக்சே கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மகாஜன ஏக்சத் பெரமுன கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தன, மற்ற மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தலைநகர் கொழும்பில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 

நாம் இங்கு குணவர்தனவைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன் அவரது தந்தை டான் பிலிப் ரூபசிங்க குணவர்தனவை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

டான் பிலிப் ரூபசிங்க குணவர்தனவின் ஆரம்பகால வாழ்க்கை

டான் ஜக்கோலிஸ் ரூபசிங்க குணவர்தன மற்றும் டொனா லியனோரா குணசேகர ஆகியோரின் புகழ்பெற்ற பொரலுகொட குடும்பத்தில் 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் நான்காவது மகனாக 1901 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி பிலிப் குணவர்தன பிறந்தார். அவர் தனது பள்ளிப் படிப்பை அவிசாவளையில் இருந்து பெற்று, பின்னர் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி (மொரட்டுவை), மற்றும் ஆனந்தா கல்லூரி (கொழும்பு) ஆகியவற்றில் படித்து தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். 

ஆனால் இலங்கையில் தனது உயர்கல்வியை முடிக்காமலேயே, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பதற்காக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இந்திய தலைவர்களுடன் சந்திப்பு

மறைந்த டான் பிலிப் ரூபசிங்க குணவர்தன சுதந்திரப் போராட்ட வீரர்களான ஜோமோ கென்யாட்டா மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரை சந்தித்தார். அவர் லண்டனில் இருந்தபோது இந்திய லீக்கிற்காக கிருஷ்ண மேனன் மற்றும் நேரு ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். 

மேலும் 1942 இல், அவர் இந்தியாவுக்குத் தப்பி வந்து இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றார். இருப்பினும், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1943 இல் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கையின் ஆரம்பம்

ஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவத்திற்கு எதிரான கிளர்ச்சி இயக்கத்தின் ஒரு மைல்கல்லாக 1935 ஆம் ஆண்டு தனது சகாக்கள் பலருடன் இணைந்து லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) என்ற முதல் இடதுசாரி அரசியல் கட்சியைத் தொடங்கினார். 

பின்னர் அதை மகாஜன ஏக்சத் பெரமுன என மாற்றினார். பிலிப் இலங்கையில் நன்கு அறியப்பட்ட அரசியல் தலைவர்களை விட பல அரசியல் சூறாவளிகளை சந்தித்துள்ளார்.

இலங்கையின் கடுமையான நெருக்கடி

உற்பத்திக்கான அடிப்படை பொருட்கள் கிடைக்காததாலும், மார்ச் 2022 முதல் நாணயத்தின் 80 சதவீத தேய்மானம், அந்நிய கையிருப்பு பற்றாக்குறை மற்றும் அதன் சர்வதேச கடன் கடமைகளை பூர்த்தி செய்யத் தவறியதாலும் நாடு கடும் நிதி சிக்கலை எதிர்கொள்கிறது. 

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வருவதற்கு இலங்கை துடிக்கிறது. ஆனால் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்கள் எதிர்காலம் குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், தந்தையைப் போலவே பொருளாதாரம் பயின்றுள்ள தினேஷ் குணவர்தன இலங்கை அரசியலில் அவரது வாரிசான தினேஷ் குணவர்தனவின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்