Rameswaram Latest News : ராமேஸ்வரம் கடற்கரையில் கடல் நீர் உள்வாங்கியதால் கடலில் உள்ள பவள பாறைகளும், சாமி சிலைகளும் வெளியே தெரிகிகிறது.
தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக புயல் காரணமாக நல்ல மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கடல் நீர் உள்வாங்க தொடங்கியது. இதனால் படகுகள் கரை தட்டி நிற்கின்றன.
மேலும் கடல்நீர் அதிகமாக உள்வாங்கியதால் உள்ளே இருக்கும் பவள பாறைகளும், சாமி சிலைகள் சிலவும் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. இந்நிலையில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக மீன் பிடிக்க செல்லவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…