Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Andrew Symonds Died: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்..!

madhankumar May 15, 2022 & 09:37 [IST]
Andrew Symonds Died: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்..!Representative Image.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்துள்ள செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்து ஒன்றில் உயிரிழந்துளார். இவர் கார் ஆஸ்திரேலியாவின் ஹெர்வி ரேஞ்ச் ரோடு பகுதியில் செல்லும் போது விபத்துக்கு உள்ளானது. இவரின் கார் வலையில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பல முறை உருண்டு, புரண்டு விபத்துக்கு உள்ளானது. 

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சைமண்ட்ஸின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரவு 11:30 மணியளவில் இந்த கார் விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களும் சைமண்ட்ஸின் இறப்பை உறுதி செய்துள்ளனர்.

அவர் மட்டும் தனியாக காரில் சென்றுள்ளார். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து உருண்டு விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 46 வயதாகும் சைமண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தனக்கென தனி இடத்தை பிடித்தார். 1999-2007 வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியபோது அந்த அணியின் முக்கிய தூணாக இருந்தவர்தான் இந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். 2012ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் மொத்தமாக ஓய்வு பெற்றார்.

கடந்த 2007-2008ம் ஆண்டு இந்திய ஆணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடியது. அப்போது, இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என விமர்சித்ததாக சைமண்ட்ஸ் குற்றம் சாட்டியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி  இருந்தது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சாதனை:

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 1462 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 5088 ரன்கள் எடுத்துள்ளார். டி 20 போட்டிகளில் 337 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவர் 24 விக்கெட் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 133 விக்கெட் எடுத்துள்ளார். டி 20 போட்டிகளில் 8 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்