Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் போராட்டம் தொடர்ந்தாலும் பயிற்சியை கைவிட மாட்டோம்-அமைச்சர் தகவல்.!

madhankumar May 27, 2022 & 12:39 [IST]
நீட் போராட்டம் தொடர்ந்தாலும் பயிற்சியை கைவிட மாட்டோம்-அமைச்சர் தகவல்.!Representative Image.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லேனாவிலக்கில் லெம்பலகுடி இலங்கை மறுவாழ்வு முகாமில் முன்னாள் மாணவர்கள் பேரவையின் கல்வி மற்றும் பல்துறை பயிற்சி மைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி மற்றும் பல்துறை பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

அங்குள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதை கைதட்டி ரசித்து பார்த்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த சஞ்சனா என்ற மாணவி ஈழத்தில் நடைபெற்ற துயரத்தையும் குடியிருமை கிடைக்காமல் அவதி அடைவதையும் பாடல் மூலமாகவும் பேசியும் எடுத்துக் கூறியதை கேட்டு கண் கலங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்குள்ள இலங்கை தமிழர்கள் மாணவர்களின் உயர்கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து உயர்கல்வித்துறை அமைச்ச முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என தெரிவித்தார். மேலும் இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, கடந்த கூட்டத்தொடரில் 314 கோடி ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கை மக்களை காக்க நானும் தமிழக அரசும் உள்ளோம் என தமிழக முதல்வர் கூறியதை எடுத்துரை அவர் அதற்காக நான் முதல்வன்’ திட்டமெல்லாம் உருவாக்கப்பட்டது. ஆகவே அனைவரும் நம்பிக்கையோடு இருக்கலாம்” என்றார். 

நீட் தேர்வை பொருத்தவரை தமிழக முதலமைச்சர் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே ஜனாதிபதி வரை செல்லாத நீட் எதிர்ப்பு மசோதா தற்போது தமிழக முதல்வரின் அழுத்தத்தால், ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வு நடைபெறும் என்று இருப்பின் தங்களது துறை சார்பாக அந்தந்த பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு தான் வருகிறது என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்