Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பசுமை தாயகம் அமைப்பு இணைந்து செயல்பட இறையன்பு ஐஏஎஸ்-க்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு

Baskarans Updated:
பசுமை தாயகம் அமைப்பு இணைந்து செயல்பட இறையன்பு ஐஏஎஸ்-க்கு அன்புமணி ராமதாஸ் அழைப்புRepresentative Image.

சென்னை: பசுமை தாயகம் அமைப்புடன் இணைந்து செயல்பட இறையன்பு ஐஏஎஸ்-க்கு, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்களாக பணியாற்றியவர்களில் மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் சிலர் மட்டும் தான். அந்த சிலரின் குறிப்பிடத்தக்கவர் முனைவர் இறையன்பு. தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக உழைத்ததுடன், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்படுவதற்கு காரணமாக இருந்தார். புவிவெப்பமயமாதல் என்ற பெருந்தீமை அன்னை பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய மிகப்பெரிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அன்னை பூமியை காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்வதிலும், அதற்கான களப் பணிகளிலும் பசுமைத் தாயகம் அமைப்புடன் இணைந்து செயல்பட முனைவர் இறையன்பு அவர்களை அழைக்கிறேன்; அழைப்பை ஏற்று அவர் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்