Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உலகிற்கு அறிமுகம்...உலக நாடுகள் அதிர்ச்சி | Iran Hypersonic Missile

Priyanka Hochumin Updated:
ஈரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உலகிற்கு அறிமுகம்...உலக நாடுகள் அதிர்ச்சி | Iran Hypersonic MissileRepresentative Image.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஃபத்தாஹ் அல்லது ஃபார்சியில் "கான்குவரர்" என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை 1,400 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடும். இந்த ஏவுகணை எந்தவொரு பிராந்திய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வழியாகவும் கடக்க முடியும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த அறிக்கையை ஆதரிக்கும் எந்த ஒரு ஆதாரமும் இதுவரை வழங்கவில்லை. இந்த தகவல் அனைத்தும் ஈரானின் அரசு தொலைக்காட்சி வழியாக உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய குடியரசில் உள்ள ஹார்ட்-லைன் துணை ராணுவ அமைப்பான ஈரானின் புரட்சிகர காவலர், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு முன்பாக ஏவுகணையின் மாதிரி வெளியிட்டது போல் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஈரான் இப்படி ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாகிவிட்டது என்று நவம்பர் மாதத்தில் புரட்சிகர காவல்படையின் ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே ஒரு வதந்தியை பரப்பினார். அது தற்போது நிஜமாகி விட்டது என்று உலக நாடுகள் நம்புகிறது.

மேக் 5-க்கும் அதிகமான வேகத்தில் அல்லது ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், அவற்றின் வேகம் மற்றும் சூழ்ச்சியின் காரணமாக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு முக்கியமான சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் பதட்டங்கள் அதிகமாக இருப்பதால், ஈரான் தற்போது இந்த ஏவுகணையை அறிமுகம் செய்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்