Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்கள் தலைமுடியை வெட்டி, ஹிஜாபை எரித்து போராட்டம்..! 31 பேர் உயிரிழப்பு..

Gowthami Subramani September 23, 2022 & 10:30 [IST]
பெண்கள் தலைமுடியை வெட்டி, ஹிஜாபை எரித்து போராட்டம்..! 31 பேர் உயிரிழப்பு..Representative Image.

ஈரான் நாட்டில், ஹிஜாப் சட்டத்திற்கு எதிராகப் பெண்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறை எடுத்த நடவடிக்கையால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரான் நாட்டில் ஹிஜாபை சரியாக அணியாததாகக் கூறி 22 வயதுடைய இளம்பெண் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பிறகு, அந்தப் பெண், காவல்துறையினரால் தாக்கப்பட்டு கோமா நிலைமையில் இருந்தார். ஆனால், தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனால், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதன் படி, இந்த அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஈரானில் பெண்கள் ஹிஜாப்பை எரித்தும், தலைமுடிகளை வெட்டியும் நூதன முறையில் போராட்டத்தை நடக்கத் துவங்கினர். ஈரான் நாட்டில், 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிஜாபை சரியாக அணியவில்லை என்பதற்காக, காவல் துறையினரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அந்தப் பகுதியில் உள்ள பெண் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு அந்த நாட்டில் உச்சபட்ச தலைவராக விளங்கும் அயதொல்லா அமி காமினிக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், சிலர் தங்கள் முகத்தில் இருந்து ஹிஜாபை கழற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கண்ணீர்புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் போராட்டத்தைக் கலைத்துள்ளனர். இத்துடன் இன்னும் சிலர் தலைமுடிகளை வெட்டிக் கொண்டும், ஹிஜாபை எரிப்பது உள்ளிட்ட செயல்களைச் செய்து வந்தனர். இதைத் தடுக்க போராட்டக்காரர்கள் மீது அடக்கு முறையைக் கையாண்டனர். போராட்டம் குறித்த செய்திகள் பரவுவதைத் தடுக்க இணையதளம் முடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஈரான் நாட்டில் 30-க்கும் மேற்பட்ட நகர்களில் போராட்டங்கள் நடைபெற்றதாகவும், இதனைக் கட்டுப்படுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கையில் 31 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்