Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீவிரவாதத்திற்கு நிதியுதவி.. அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்தது அரசு!!

Sekar August 13, 2022 & 15:58 [IST]
தீவிரவாதத்திற்கு நிதியுதவி.. அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்தது அரசு!!Representative Image.

ஜம்மு-காஷ்மீர் அரசு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் சிக்கிய பிட்டா கராத்தேவின் மனைவி உட்பட 4 ஊழியர்களை சனிக்கிழமை பணிநீக்கம் செய்துள்ளது. 

ஜேகேஎல்எஃப் தீவிரவாதி பிட்டா கராத்தே எனும் ஃபரூக் அகமது தாரின் மனைவி அசாபா அர்ஜூமந்த் கான்  2011 ஆம் ஆண்டு பேட்ச் ஜேகேஏஎஸ் அதிகாரி ஆவார். அரசமைப்புச் சட்டத்தின் 311வது பிரிவின் கீழ் நான்கு ஊழியர்களும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்த பிரிவு விசாரணையின்றி அரசாங்கம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உதவுகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மற்றொரு முக்கிய பெயர், தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாவுதீனின் மகன் சையது அப்துல் முயீத். முயீத் தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப மேலாளராக இருந்தார்.

பிட்டா கராத்தே என்கிற ஃபரூக் அகமது தார், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தற்போது நீதிமன்றக் காவலில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாக சேவை அதிகாரியான அவரது மனைவி அசாபா அர்ஜூமந்த் கான், ஊரக வளர்ச்சி இயக்குனரகத்தில் பணியிலிருந்து வந்தார்.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட மற்றவர்கள் விஞ்ஞானி ஆன டாக்டர் முஹீத் அஹ்மத் பட் மற்றும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராக ஊருக்கும் மஜித் ஹுசைன் காதிரி ஆவர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்