Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரொம்ப புண்படுத்துறார் பிடிஆர்.. முதல்வர் ஸ்டாலினிடம் ஜாக்டோ ஜியோ புகார்?

Sekar August 01, 2022 & 17:30 [IST]
ரொம்ப புண்படுத்துறார் பிடிஆர்.. முதல்வர் ஸ்டாலினிடம் ஜாக்டோ ஜியோ புகார்?Representative Image.

பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தங்கள் மனம் புண்படும்படி பேசி வருவதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிப்பதற்கு அரசு ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவும் ஒரு காரணமாக இருந்தது. இதற்கு காரணம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிபிஎஸ் முறையிலான பென்ஷன் திட்டம் ஒழிக்கப்பட்டு, மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தையே செயல்படுத்துவோம் என திமுக அளித்த வாக்குறுதி முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், நிதி சிக்கலும் இருப்பதால் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த முடியாது என வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

எனினும் முதல்வர் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பலமுறை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் முதல்வர் ஸ்டாலினிடமிருந்தும் வெளிப்படையாக எந்த பதிலும் வரவில்லை. இதனால் ஆட்சிக்கு வந்த பின் தங்களை திமுக அரசு கைகழுவி விட்டதா என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வழங்குவதாக பொதுவெளியில் அடிக்கடி பேசி வருவது மக்கள் மத்தியில், தங்களால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கருதுகின்றனர்.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதற்கான அறிவிப்பை அவர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். 

மேலும் இந்த மாத இறுதியில் பென்ஷன் மீட்பு மாநாடு ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் பங்கேற்கச் செய்து, அவரை வைத்துக் கொண்டு மேடையிலேயே அவரிடம் பழைய பென்ஷன் திட்டம் குறித்து கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, பென்சன் மீட்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்கள் குறித்து பேசும் வார்த்தைகள் தங்களது மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாக நேரடியாகவே முதல்வரிடம் புகார் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்