Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவிலேயே அதிக குழந்தைத் திருமணங்கள்.. தமிழக நிலை என்னனு தெரியுமா?

Sekar October 08, 2022 & 13:55 [IST]
இந்தியாவிலேயே அதிக குழந்தைத் திருமணங்கள்.. தமிழக நிலை என்னனு தெரியுமா?Representative Image.

மாந்திரீகக் கொலைகளுக்குப் புகழ் பெற்ற ஜார்க்கண்ட், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய மக்கள்தொகை மாதிரி கணக்கெடுப்பின்படி, அதிக சிறுமிகள் திருமணம் நடக்கும் மாநிலமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்யும் சிறுமிகளின் சதவீதம் 5.8 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதை அடையும் முன் திருமணம் செய்து கொண்ட பெண்களின் சதவீதம் தேசிய அளவில் 1.9 ஆகவும், கேரளாவில் மிக குறைந்தபட்சமாக 0.0 ஆகவும் ஜார்கண்டில் மிக அதிகபட்சமாக 5.8 ஆகவும் இருக்கிறது என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஜார்கண்டில், குழந்தை திருமணங்கள் கிராமப்புறங்களில் 7.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் மூன்று சதவீத திருமணங்களாகவும் உள்ளன. 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கடந்த மாத இறுதியில் அறிக்கை வெளியிடப்பட்டது.

ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.

மேற்கு வங்காளத்தில் 54.9 சதவீத பெண் குழந்தைகள் 21 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள், ஜார்கண்ட் மாநிலத்தின் தேசிய சராசரியான 29.5 சதவீதத்திற்கு எதிராக 54.6 சதவீதமாக உள்ளது என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 0.5 சதவீதமாக உள்ளது. மேலும் உத்தரபிரதேசத்தில் 3.3 சதவீதம் ஆகவும், மத்திய பிரதேசத்தில் 2.1 சதவீதமாகவும், குஜராத்தில் 0.4 சதவீதம் ஆகவும் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்