Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஷாக்கிங்.. அமைச்சர் மாரடைப்பால் மரணம்.. முதல்வர் இரங்கல்!!

Sekar September 07, 2022 & 15:20 [IST]
ஷாக்கிங்.. அமைச்சர் மாரடைப்பால் மரணம்.. முதல்வர் இரங்கல்!!Representative Image.

கர்நாடக மாநில உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி, பெங்களூருவில் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். 61 வயதான அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பெங்களூரு டாலர் காலனியில் உள்ள அவரது வீட்டின் குளியலறையில் கட்டி விழுந்து, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போது வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கட்டியின் மறைவையடுத்து, கர்நாடக அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறுகிறது. மேலும், அரசின் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்த அரசு, அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது அமைச்சரவை சகாவான மற்றும் நெருங்கிய நண்பரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி, ஆற்றல் மிக்க தலைவர் மற்றும் விசுவாசமான பொது ஊழியரை மாநிலம் இழந்துள்ளது என்று முதல்வர் கூறினார்.

உமேஷ் கட்டி யார்?

பெலகாவி மாவட்டத்தின் ஹுக்கேரி தாலுக்காவில் உள்ள பெல்லட்பாகேவாடியைச் சேர்ந்த கட்டி, 1985 இல் தனது தந்தை விஸ்வநாத் கட்டியின் மறைவைத் தொடர்ந்து அரசியலில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார், மேலும் எட்டு முறை ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

2008-ல் பாஜகவில் இணைந்த கட்டி, முன்பு ஜனதா கட்சி, ஜனதா தளம், ஐக்கிய ஜனதாக தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். ஜே.எச்.படேல், பி.எஸ். எடியூரப்பா, டி.வி. சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசாங்கங்களில் அமைச்சராக பணியாற்றினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்