Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடரும் மழை.. பள்ளிகள் விடுமுறை.. படகுகளை நாடும் பெங்களூருவாசிகள்!!

Sekar September 07, 2022 & 13:19 [IST]
தொடரும் மழை.. பள்ளிகள் விடுமுறை.. படகுகளை நாடும் பெங்களூருவாசிகள்!!Representative Image.

கர்நாடகா பெங்களூருவில் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக, கிழக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தொகுதி கல்வி அலுவலர் நேற்று இரவு வெளியிட்டார். 

அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும், தொகுதி கல்வி அலுவலர் பிறப்பித்த இந்த உத்தரவு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நகரில் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின் தலைமை ஆணையர் துஷார் கிரி நாத், இது கடந்த 50 ஆண்டுகளில் நகரின் இரண்டாவது மிகப்பெரிய மழைப்பொழிவு என்று கூறினார். பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்தது. நேற்று இரவு வரை இதே நிலை நீடித்தது. நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் நகரத்தில் வரும் 2-3 நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என்று கணித்துள்ளது.

ஏமலூர், ரெயின்போ டிரைவ் லேஅவுட், சன்னி ப்ரூக்ஸ் லேஅவுட், மாரத்தஹள்ளி போன்ற நகரின் பல பகுதிகளில் அலுவலகம் செல்வோர், பள்ளிக் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கிய தெருக்களைக் கடப்பதற்கு படகுகள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்துவது வழக்கமான காட்சியாக இருந்தது.

இதற்கிடையே தேசிய பேரிடர் மேலாண்மை குழு வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புகளில் இருந்து மக்களை மீட்க களமிறக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்