Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தீபத் திருநாள் கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்….!

Gowthami Subramani Updated:
தீபத் திருநாள் கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்….! Representative Image.

கார்த்திகை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம் திருநாள் சிறப்பான நாளாகும். கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளாகும். இத்தினத்தில் கோவில்களிலும், இல்லங்களிலும் பிரகாசமான தீபங்கள் ஏற்றப்பட்டு மகிழ்ச்சியாக கொண்டாடப்படும். திருவண்ணாமலையில் தீப ஒளி ஏற்றப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மாள் வழிபாடு சிறப்பாக நடைபெறும்.

இந்த சுப தினத்தில், எல்லோருடைய வாழ்விலும் தீப ஒளி மின்னுவது போல், கார்த்திகை தீபம் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வோம்.

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

நட்சத்திர ஒளியில் வானம் நிறைந்திருப்பது போல்,

தீப ஒளியில் உங்கள் இல்லம் நிறையட்டும்.

சகல சுகங்களையும் அருளும்…

கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்…!

இல்லத்தில் அன்பு ஒளி வீச ஏந்திடுவோம் அகல்தீபத்தை...

தீப ஒளி போல, என்றென்றும் வாழ்க்கையில் சந்தோஷம் நிறைய…

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துகள்..!

என்றென்றும் வாழ்வில் ஒளி மிகுந்திட, வீட்டில் தீப ஒளி ஏற்றுவோம்…!

இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துகள்..!

வாழ்க்கையில் இன்பங்கள் நிறைந்து…

துன்பங்கள் நிரந்தரமாய் ஓடிட…

இருளை அகற்றி ஒளியேற்றுவோம்..!

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்...!

வண்ணமயமான எதிர்காலத்திற்கு

வண்ணமிகு தீபங்களை ஏற்றிடுவோம்..!

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்...!

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்