Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெங்களுரைத் தொடர்ந்து கேரளா.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!

Sekar September 07, 2022 & 13:00 [IST]
பெங்களுரைத் தொடர்ந்து கேரளா.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!Representative Image.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், இப்போது அண்டை மாநிலமான கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை/ மின்னலுடன் கூடிய பரவலான மழையை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநிலத்தில் உள்ள முல்லை பெரியாறு மற்றும் இடுக்கி உள்ளிட்ட பல அணைகளின் நீர்மட்டம் அந்தந்த சேமிப்பு கொள்ளளவை எட்டியுள்ளது மேலும் அவற்றில் சில, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரெட் அலர்ட் நிலையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இடுக்கியில் உள்ள பொன்முடி, கல்லார்குட்டி, எரட்டையாறு மற்றும் கீழ் பெரியாறு, கோழிக்கோடு குட்டியடி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள மூழியாறு ஆகிய அணைகளில் ரெட் அலர்ட் அளவை எட்டியுள்ளது.

இதற்கிடையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், கடந்த சில மணி நேரங்களாக அப்பகுதியில் மழை குறைந்துள்ளதால் மதியம் 12 மணி நிலவரப்படி 135.7 அடியாக சீராக உள்ளது என்றும் எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் இடுக்கி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறினார்.

இடுக்கி அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. ஆனால் தற்போது அங்கு மழை குறைந்துள்ளதால் கவலைப்பட வேண்டியதில்லை.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று, வானிலை தரவுகளை குறிப்பிட்டு, முதல்வர் பினராயி விஜயன், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்திருந்தார்.

மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் அதிகரித்து வரும் பல்வேறு நதிகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்