Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மின் மற்றும் ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள் | TNEB Aadhar Link

Priyanka Hochumin Updated:
மின் மற்றும் ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள் | TNEB Aadhar LinkRepresentative Image.

தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் மின் இணைப்பையும் ஆதார் எண்ணையும் இணைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை தமிழக மக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் அதிக மக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் சேர்க்காமல் இருந்ததால் ஜனவரி 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எனவே, இன்றே கடைசி நாள் என்பதால் இணைக்காமல் இருப்பவர்கள் விரைந்து செயல்படுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. அது மட்டும் இல்லாமல் 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. அவற்றுள் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் என்று தனித்தனியாக வழங்கப்படுகிறது. இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி " தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 2.34 கோடி நுகர்வோர்கள் இணைப்புகள் இணைத்துள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 87.44% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்