Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்தவர்களும், மீட்கப்பட்டவர்களும்..! | Borewell Accidents in India

Gowthami Subramani Updated:
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்தவர்களும், மீட்கப்பட்டவர்களும்..! | Borewell Accidents in IndiaRepresentative Image.

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே இதுவரை 13 பேர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளனர். தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவர்கள் சிலரில் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் மரணமடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தவர்களின் பட்டியலைக் காணலாம்.

 கடந்த 2009 பிப்ரவரி 22 ஆம் நாள் மயோ என்ற 6 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். பிறகு 30 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இறந்தே மீட்கப்பட்டான்.

இதே 2009 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் 3 வயது சிறுவன் கோபிநாத் திருவண்ணாமலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்தான்.

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டில் செப்டம்பர் 8 ஆம் நாள் 8 வயது சுதர்சன் என்ற சிறுவன் திருநெல்வேலியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். இந்த ஆழ்துளைக் கிணற்றின் அடி 200 அடி ஆகும். சிறுவனை மீட்கும் போராட்டத்தில், சிறுவன் இறந்தே மீட்கப்பட்டான்.

2012 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் குணா என்ற 3 வயது சிறுவன் 50 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். பல்வேறு முயற்சிக்குப் பிறகு, சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டான்.

2013-ல் ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் முத்துலட்சுமி என்ற சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார். மேலும், சிறுமி மீட்கப்பட்டு கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

இதே 2013 ஆம் ஆண்டில் செப்டம்பர் 23 ஆம் நாள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்தது.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள், விழுப்புரம் மாவட்டத்தில் பல்லகேசரி என்ற இடத்தில் ஆழ்துளைக் கிணற்றில் மதுமிதா என்ற சிறுமி விழுந்து இறந்தது.

பின்னர், இதே ஆண்டு மற்றும் மாதத்தில் அதாவது 2014 ஏப்ரல் 14 ஆம் நாள் திருநெல்வேலியில் 3 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் இழுந்து பிறகு மீட்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள், திருவண்ணாமலையில் கலசப்பாக்கம் என்ற இடத்தில் குழந்தை தவறி விழுந்து இறந்தே மீட்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் ஏப்ரல் 13 ஆம் நாள் ஆற்காட்டில் உள்ள 350 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இந்த குழந்தையும் இறந்தே மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் 2 வயது குழந்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. இந்தக் குழந்தை பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் சுஜித் என்ற சிறுவனின் மரணம் நாட்டையே உலுக்கியது. திருச்சியில் உள்ள மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இந்த சிறுவன் 80 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இறந்து மீட்கப்பட்டார்.

தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 2½ வயது கொண்ட சிறுமி சிரிஸ்தி 2023 ஜூன் 6 அன்று ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. இந்த குழந்தை முதலில் 40 அடி ஆழத்தில் சிக்கியது. ஆனால், இக்குழந்தையை மீட்பதற்காக இயந்திரங்கள் பயன்பட்ட நிலையில், அதிர்வு தாங்காமல் 100 அடி ஆழம் வரை சென்றது. இதனால், இரண்டு நாள்களுக்கும் மேலாக, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 52 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது. ஆனால், குழந்தை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் இறந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்