Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

ஜாதியை பாகுபாடு காட்டி சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு..

Nandhinipriya Ganeshan Updated:
ஜாதியை பாகுபாடு காட்டி சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு..Representative Image.

உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ, சமீபத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் பட்டியலினத்தவரை தவறாக சித்தரித்ததாகக் கூறி சர்ச்சை எழுந்த நிலையில், அந்த வீடியோவை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. 

கடந்த ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ 'Recycling Kachra’ என்ற தலைப்பில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டது. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சுட்டிக்காட்டி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த வீடியோ ஜொமோட்டோ நிறுவனத்திற்கே பின்னடைவாக மாறிவிட்டது.

அதாவது, கடந்த 2001 ஆம் ஆண்டு அமீர்கான் நடித்து இந்தியில் வெளியான படம் 'லகாக்'. இப்படத்த்ஹில் 'கஸ்ரா' என்ற கதாபார்த்திரத்தில் பட்டியலினத்தவராக ஆதித்ய லக்கியா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தை தனது வீடியோவில் பயன்படுத்தி கொண்ட நிறுவனம் அவரை மனித மேஜையாகவும், கை துண்டு, விளக்கு, பூந்தொட்டி, காகிதம் போன்று ஒரு குப்பையாக சித்தரித்து அந்த வீடியோவில் காட்டியிருந்தது. ஒடுக்கப்பட்ட சமூகமாக காட்டபட்ட கதாபாத்திரத்தை குப்பை போல சித்தரித்ததற்கு எதிர்ப்பு எழுந்தது. 

இதையடுத்து அந்த வீடியோவை ஜொமோட்டோ நிறுவனம் நீக்கியுள்ளது. அத்தோடு ட்விட்டரில் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளது. அதில், 'உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, பிளாஸ்டிக் கழிவுகளின் சாத்தியக் கூறுகள் மற்றும் மறுசுழற்சியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை நகைச்சுவையான முறையில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ உருவாக்கப்பட்டது. இதில் சில சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்திலும் இந்த செயலில் ஈடுபடவில்லை. தற்செயலாக நடந்த இந்த தவறுக்கு பலனாக அந்த வீடியோவை நாங்கள் நீக்கிவிட்டோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்