Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதல்முறையாக.. உச்சநீதிமன்ற வழக்குகள் நேரடி ஒளிபரப்பு.. வீடியோ உள்ளே!!

Sekar August 26, 2022 & 11:21 [IST]
முதல்முறையாக.. உச்சநீதிமன்ற வழக்குகள் நேரடி ஒளிபரப்பு.. வீடியோ உள்ளே!!Representative Image.

இன்றோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் இறுதி நாளைக் குறிக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் இலவசங்கள் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இன்று சுமார் 20 வழக்குகள் மீதான உச்ச நீதிமன்ற விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் முதல் முறையாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

இன்று காலை 10:30 மணி முதல், NIC (National Informatics Centre) வெப்காஸ்ட் போர்டல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று உச்ச நீதிமன்ற அறிவிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நேரடி ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.

தேர்தலுக்கு முன் இலவசங்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான மிக முக்கியமான உத்தரவு இந்த நேரடி ஒளிபரப்பின்போது வழங்கப்பட உள்ளது.

இவை இலவசங்கள் அல்ல, பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் என்று பல அரசியல் கட்சிகள் வாதிட்டன.

இதேபோன்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 2013 தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளதால், வழக்கை வேறு அமர்வுக்கு அனுப்புவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்.

உச்சநீதிமன்ற நேரடி ஒளிபரப்பு இங்கே :-

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்