Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு.. மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில் வெளிவந்த தகவல்..!

Gowthami Subramani Updated:
உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு.. மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில் வெளிவந்த தகவல்..!Representative Image.

உலகளாவிய மற்றும் ஆசிய வளர்ச்சியின் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில் வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் படி, கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை, பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தியதாகவும், இதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக வளர்ச்சியின் உந்து சக்தி

கடந்த 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது இந்தியா ஒட்டுமொத்தமான மாற்றங்களை எதிர்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பத்தாண்டு காலங்களில் உலகளவில் மார்க்கெட் மற்றும் குறு நிறுவனங்களின் தலைசிறந்தப் பங்களிப்பின் மூலம் இந்தியா முன்னணி நாடாக முன்னேறியிருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 25 ஆண்டுகள், இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பங்குச் சந்தைகளில் சிறந்த பங்களிப்பினைக் கொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவீன மூலதனம்

அதன் படி, பத்து மிகப்பெரிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில், விநியோகத்திற்கு உகந்த கொள்கை சீர்திருத்தங்கள், நேரடி வங்கி பணப்பரிவர்த்தனை, அந்நிய நேரடி முதலீடு, பணவீக்க இலக்கு போன்றவை அடங்கும். இந்த ஆய்வறிக்கை, மத்திய அரசின் சிறப்பான கொள்கைகளை தேர்வு செய்யும் அணுகுமுறையே இந்த மாற்றங்களுக்கு வித்திட்டு பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்