Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

5 ஆண்டு காதலிக்கு காதலன் செய்த கொடூர செயல்...திடுக்கிடும் தகவல்!

Priyanka Hochumin September 12, 2022 & 13:05 [IST]
5 ஆண்டு காதலிக்கு காதலன் செய்த கொடூர செயல்...திடுக்கிடும் தகவல்! Representative Image.

இந்த காலத்தில் யாரை நம்புவது என்றே தெரியாமல் மக்கள் அனைவரும் பயத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு உதாரணமாக நிறைய செய்திகளை நாம் பார்ப்பதுண்டு. இப்படி பட்ட சூழலில் பெண்களை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களோ வயசு கோளாறில் எதையும் யோசிக்காமல் தாங்கள் நினைப்பது தான் சரி என்று சுற்றிக்கொண்டிருக்கின்றனர். அப்படி செய்கையில் என்ன விபரீதம் நடக்கும் என்பதை பற்றியெல்லாம் யோசிக்கிறதே இல்லை. இதற்கு உதாரணமாக திகழ்கிறது தெலுங்கானாவில் நடந்த இந்த கோர சம்பவம்.

மனம் விட்டு பேசணும் வா...

தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம் மானாஜிப்பேட்டை பகுதியை சேர்ந்த சாய் ப்ரியாவும், ஸ்ரீசைலன் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல 3 மாதங்களுக்கு முன்னர் சாய் பிரியா தன்னுடைய பெற்றோர்களிடம் காதலை கூறி திருமணத்திற்கு சம்மதம் கேட்டிருக்கிறாள். கடும் கோபமடைந்த அவளின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புதல் தராமல், சாய் ப்ரியாவை அனைத்தும் மறக்க வலியுரித்துள்ளனர். இதனால் ஸ்ரீசைலனிடம் பேசுறதை அடியோடு நிறுத்திவிட்டால் சாய் பிரியா.

சந்தேகமான மெசேஜ்!

இப்படி இருக்கையில் செப்டம்பர் 5 ஆம் தேதி கடைசி முறையாக மனம் விட்டு பேசி பிரிந்துவிடலாம் என்று கூறி ஸ்ரீசைலன், சாய் பிரியாவை வெளியே கூப்பிட்டு இருக்கிறான். அதனை நம்பி சாய் ப்ரியாவும் அவனிடம் பைக்கில் ஏறி சென்று இருக்கிறாள். ஆனால் அன்று இரவு சாய் பிரியா அவளின் வீட்டிற்கு வரவில்லை. பதற்றமடைந்த பெற்றோர் அவளை தேட ஆரம்பித்துள்ளனர். அப்பொழுது அடித்த நாள் காலை சாய் ப்ரியாவியிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. நான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் நீங்கள் அதற்கும் மறுப்பு தெரிவிப்பீர்கள் என்பதால் நான் அவரை திருமணம் செய்ய ஹைதெராபாத் செல்வதாகவும் மெசேஜ் வந்தது.

யாரை ஏமாத்துற...கொடு கம்பிளைன்ட

இருப்பினும் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீசைலனை பிடித்து விசாரித்த போலீசாருக்கு பல உண்மைகள் தெரியவந்தது. ஸ்ரீசைலன் சாய் ப்ரியாவை கந்துரு கிராமம் அருகில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. கடும் கோபமடைந்த ஸ்ரீசைலன் சாய் ப்ரியாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

துப்பட்டாவால் நெரித்து கொலை....

காதலித்தவனை நம்பி வனத்துக்கு இப்படியா நடக்கணும் என்ற விரக்தியில் சாய் பிரியா, நடந்ததை போலீஸிடம் கூறப்போவதாக மிரட்டியுள்ளார். பயத்தாலும் கோபத்தாலும் சாய் பிரியா போட்டிருந்த துப்பட்டாவால் அவளை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றிருக்கிறான் ஸ்ரீசைலன். பிறகு அவனின் உறவினர் சிவா உதவியுடன் சாய் ப்ரியாவின் சடலத்தை கால்வாயில் புதைத்துள்ளனர். பிறகு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சாய் ப்ரியாவின் போனில் இருந்து மெசேஜ் அனுப்பியதாகவும் கூறியுள்ளான். அவர்களின் வாக்கு மூலத்தைக் கொண்டு கால்வாயில் இருக்கும் சாய் ப்ரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பியுள்ளனர். கொலை செய்த ஸ்ரீசைலன், உதவி புரிந்த சிவா இருவரும் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்