Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீதிமன்றத்தை மதிக்காத தாசில்தார் குற்றவாளி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

Sekar August 03, 2022 & 14:46 [IST]
நீதிமன்றத்தை மதிக்காத தாசில்தார் குற்றவாளி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!Representative Image.

ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாத பெண் தாசில்தாரை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் தாலுக்காவில் அமைந்துள்ளது கடலாடி எனும் கிராமம். இங்கு பொதுப்பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்ததால் அதை அகற்றக் கோரி முருகன் என்பவர் 2017லேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அப்போது இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முருகனின் கோரிக்கையை ஏற்று 12 வாரங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் இந்த உத்தரவை அரசு அதிகாரிகள் மதிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டதாக 2018இல் முருகன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவந்த இந்த வழக்கு, கடந்த ஜூன் மாதம் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 4 வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி விடுகிறோம் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் சொன்னபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, 2 நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகிறோம் என அரசுத் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஆனால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று தெரிவித்த நீதிபதிகள், உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாரை குற்றவாளி என அறிவித்து, சிறை தண்டனை விதிக்க போவதாக அறிவித்தார்.

இதனைப்படி கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தார் லலிதா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விபரத்தை நாளை மறுநாள் அறிவிக்க உள்ளதாகவும், அப்போது லலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றத்தில் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி பண்டாரி, இது வெறும் ஆரம்பம் தான் என எச்சரித்தார்.

இதனால், இனி நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை அவர் தோண்டித் துருவ தயாராகிவிட்டார் எனவும், இதனால் அரசில் பூகம்பமே வெடிக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்