Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தலைவரே நீங்க வேற ரகம்.. கூகுளையே மிரட்டும் கூகுள் தீம் ரெஸ்யூம்.. இப்டி கூட ரெஸ்யூம் ரெடி பண்ணலாமா!

Nandhinipriya Ganeshan November 17, 2022 & 19:13 [IST]
தலைவரே நீங்க வேற ரகம்.. கூகுளையே மிரட்டும் கூகுள் தீம் ரெஸ்யூம்.. இப்டி கூட ரெஸ்யூம் ரெடி பண்ணலாமா!Representative Image.

ஒரு நல்ல வேலையை பெற மிகவும் முக்கியமானது ரெஸ்யூம் தான். இதற்காக நம்மில் பலரும் நிறைய மெனக்கெடுவோம். அதுவும், நம்ம ட்ரீம் கம்பெனியில் பணிபுரிய வேண்டும் என்றால் அதற்காக தனித்துவமான புதிய ஐடியாக்களை பயன்படுத்தி சூப்பரான ரெஸ்யூமை தயார் செய்வோம். ஆனால், லிங்கிடு இன் தளத்தில் யூசர் ஒருத்தர் உலகின் நம்பர் ஒன் நிறுவனமான கூகுளில் வேலை பெறுவதற்காக அல்டிமேட்டாக யோசித்து தனித்துவமான ரெஸ்யூமை உருவாக்கி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

'HiCounselor' என்ற வேலை சார்ந்த ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் சிஇஓ தான் ஆதித்யா சர்மா. தனது ட்ரீம் நிறுவனத்தில் வேலை பெறுவதற்காக, கூகுள் செர்ச் ரிசல்ட் முதல் பக்கத்தை டெம்ப்ளேட்டாக வைத்து, கூகுள் டார்க் தீம்மில் தனது ரெஸ்யூமை உருவாக்கியுள்ளார்.

 

அதாவது, கூகுளில் தேடும் செர்ச் பகுதியில் சிறந்த ஊழியர் யார் என்ற கேள்வியை கேட்டு, அதற்கு ஆதித்யா சர்மா என்று கூகுள் பதில் சொல்வதாக வைத்து அதில், தனது சுய விவரங்களை பதிவு செய்து ரெஸ்யூமை தயாரித்துள்ளார். கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதை உணர்ந்த ஆதித்யா கிரியேட்டிவ்வாக இந்த ரெஸ்யூமை தயாரித்துள்ளார். 

தற்போது இந்த பதிவுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள், கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட கமெண்ட்டுகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்லாமல், பலரும் இந்த பதிவை வைரலாக பகிந்து வருகிறார்கள். தனது கிரியேட்டிவிட்டியால் ஆதித்யா சர்மா ஒரே நாளில் கூகுளில் பலராலும் தேடும் அளவிற்கு பிரபலமாகியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்