Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதுக்குள்ள இன்னொரு வைரஸா - 9 பேர் மரணம் | Marburg Virus UPSC

Priyanka Hochumin Updated:
அதுக்குள்ள இன்னொரு வைரஸா - 9 பேர் மரணம் | Marburg Virus UPSCRepresentative Image.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் இந்த உலகமே ஸ்தம்பித்து போனது. தற்போது தான் சற்று பழைய நிலைமைக்கு மாறி வருகிறது. இந்த நிலையில் மத்திய ஆப்பிரிக்காவில் வினோத வைரஸின் தாக்கத்தால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த தகவல் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த முழு தகவலையும் இந்த பதிவில் பாப்போம்.

அதுக்குள்ள இன்னொரு வைரஸா - 9 பேர் மரணம் | Marburg Virus UPSCRepresentative Image

வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் வெளியிட்ட அறிக்கையில், கடந்த திங்கட்கிழமை அன்று மத்திய ஆப்பிரிக்காவில் ஒன்பது நபர்களுக்கு மார்பர்க் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் இன்று கிடைத்த தகவல் படி, ஒன்பது பேர் அந்த வைரஸால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆகையால் அப்பகுதி மக்களை தனிமை படுத்தி அனைவருக்கும் டெஸ்ட் செய்யப்படுவதாகவும் கூறினர்.

எபோலா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த மார்பர்க் வைரஸ் வேகமாக பரவும் தொற்றாகும். மேலும் இறப்பு விகிதம் 88 சதவீதமாக இருக்கின்றதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். மார்பர்க் வைரஸின் அறிகுறி - காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, கடுமையான உடல்நலக்குறைவு ஆகியவையாகும். தற்போது வரை இந்த வைரஸ் தொற்றுக்கு எந்த தடுப்பூசி அல்லது சிகிச்சையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் வைரஸை கட்டுக்குள் வைக்க என்ன வலியோ அதனை மேற்கொள்வதாக வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் கூறியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்