Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதெல்லாம் ஒரு சடங்கா..?மனுஷன் ஆத்திரத்தை வேணா அடக்கலாம் ஆனா அத எப்படி அடக்குறது..?

madhankumar May 22, 2022 & 13:30 [IST]
இதெல்லாம் ஒரு சடங்கா..?மனுஷன் ஆத்திரத்தை வேணா அடக்கலாம் ஆனா அத எப்படி அடக்குறது..?Representative Image.

இந்தோனேசியா நாட்டில் இன்றும்கூட குறிப்பிட்ட அளவிலான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில், திடாங் பழங்குடியின சமூகத்தினர் என அழைக்கப்படுபவர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடைப்பட்ட எல்லை அருகே வடகிழக்கு பகுதியான போர்னியோ என்ற இடத்தில் வசிக்கின்றனர். அவர்களது சமூகத்தில், திருமணம் முடிந்த தம்பதி முதல் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க கூடாது என்ற வினோத நடைமுறை உள்ளது. இந்த விதியை மீறினால் அந்த தம்பதிக்கு பயங்கர விளைவுகள் ஏற்படும்.

இதனை மீறி அவ்வாறு செய்தால் திருமண முறிவு, துணைக்கு துரோகம் செய்தல், இளம் வயதில் தம்பதியின் குழந்தைகள் உயிரிழப்பது போன்ற சோகங்கள் ஏற்படும் என்பது பழங்குடியினரின் நம்பிக்கையாக உள்ளது. அதனால், இளம் தம்பதியை கண்காணிப்பதற்கென்றே பலர் இருப்பார்கள். தம்பதிக்கு குறைந்த அளவிலான உணவும், நீரும் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. 3 நாட்கள் முடிந்த பின்னர், அந்த தம்பதியை குளிக்க வைத்து, கழிவறையை பயன்படுத்த அனுமதி அளித்து விடுவார்கள்.

எப்போதெல்லாம் அந்த பழங்குடியின மக்கள் வசிக்கும் ஊரில் திருமண நிகழ்ச்சி நடைபெறுமோ, அப்போதெல்லாம் புதிதாக திருமணமாகும் தம்பதிகள் இந்த வினோத நடைமுறையை கடைப்பிடித்தே ஆக வேண்டும். அனைத்து திருமண சடங்கு உள்ளிட்ட நடைமுறைகளும் முடிந்த பின்னர், அந்த தம்பதியை அறை ஒன்றுக்கு அழைத்து செல்வார்கள். அந்த அறையிலேயே தம்பதியின் முதல் 3 நாள் கழியும் இது அதைவிட கொடுமையான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், அவர்களால் அவசரத்திற்கு கூட கழிவறை செல்ல முடியாது. மிகவும் சிரமப்பட்ட இந்த சடங்கில் ஈடுபடுகின்றனர். தம்பதியின் உறவினர்களே கண்காணிப்புக்கான பணியை மேற்கொள்ளும் பொறுப்புகளை எடுத்து கொள்கிறார்கள். செய்யப்படும் சடங்கி எந்த குறையும் இல்லாமல் சரியாக செய்து முடிப்பதே, உண்மையில் இந்த சவாலில் தம்பதி வெற்றி பெறுகிறார்களா? என்று அவர்கள் உறுதி செய்கிறது.

இந்த கடுமையான சவாலை சந்தித்து அதில் வெற்றி பெறும் தம்பதியின் திருமண வாழ்வே நீடித்திருக்க முடியும் என்றும் அதனை செய்ய தவறுபவர்களுக்கு திருமண வாழ்வில் துயரங்கலே  வந்து சேரும் என்றும் நம்பப்படுகிறது. இதனை இளம் தம்பதி எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கின்ற போதும், இன்றைய காலகட்டத்திலும் இந்த வினோத சடங்கை அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்