Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

லாரியில் இருந்து 18 டன் என்ஜின் ஆயில் சாலையில் கொட்டியதால் பரபரப்பு | Masab Tank Oil Spills Accident

Priyanka Hochumin Updated:
லாரியில் இருந்து 18 டன் என்ஜின் ஆயில் சாலையில் கொட்டியதால் பரபரப்பு  | Masab Tank Oil Spills AccidentRepresentative Image.

கடந்த புதன்கிழமை மசாப் டேங்கில் உள்ள என்எம்டிசி அலுவலகம் அருகே ஓடும் லாரியில் இருந்து 18 டன் இன்ஜின் ஆயில் சாலையில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் பல பிளாஸ்டிக் பேரல்களில் இன்ஜின் ஆயிலை ஏற்றிச் சென்ற லாரி மசாப் டேங்க் மேம்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போக்குவரத்து அதிகாரி ராம் பிரசாத் கூறினார். மேலும் என்ஜின் ஆயில் தவறி கீழே சிந்தாமல் இருப்பதற்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அந்த லாரியில் இல்லை என்று தெரிவித்தார். அந்த இடத்தில் என்ஜின் ஆயில் சிந்திருப்பது தெரியாமல் வாகனங்கள் வந்த பொது மக்கள் வழுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர். ஆனால் யாருக்கும் எந்த உயிர் சேதாரமும் இல்லை.

மேலும் காலை 10.30 மணியளவில், தகவல் அறிந்து GHMC இன் பேரிடர் மீட்புப் படையுடன் (DRF) போக்குவரத்து காவல்துறையினர் விபத்து பக்கத்திற்கு சென்று அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முயன்றனர். அது மட்டும் இன்றி லாரி நிறைய மணலை எடுத்து வந்து சாலையில் சிந்திய என்ஜின் ஆயில் மீது போட்டு மேலும் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முயன்றனர். மதியம் 1 மணியளவில் எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்