Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

திடீரென இடிந்து விழுந்த மெட்ரோ தடுப்புகள் | Metro Train Barrier Breakdown

Priyanka Hochumin Updated:
திடீரென இடிந்து விழுந்த மெட்ரோ தடுப்புகள் | Metro Train Barrier BreakdownRepresentative Image.

பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் பணிக்காக அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் சாலையில் திடீரென விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த முழு விவரமும் இதோ.
சென்னையில் கிண்டி முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் சமயத்தில் குமணன்சாவடியில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் திடீரென இடிந்து விழுந்தன. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் சற்று நகர்ந்து மெதுவாக செல்ல ஆரம்பித்தனர். ஆனால் அப்போது ஒருவர் மீது அந்த தடுப்புகள் விழுந்ததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மெட்ரோ பணியாளர்கள் அந்த தடுப்புகளை அகற்றி மீண்டும் பணிகளை தொடங்கினர். இது குறித்து பொது மக்கள் முன்வைக்கும் புகார் என்னவெனில் எடை அதிகமான தடுப்புகளை கம்மி இடை கொண்ட கம்பிகள் மீது வைத்திருப்பதால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்