Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மெட்ரோ சுரங்க பாதையால் தோராட்டத்திற்கு பாதிப்பு இருக்காது: மெட்ரோ திட்ட மேலாண்மை இயக்குனர் தகவல்

Baskarans Updated:
மெட்ரோ சுரங்க பாதையால் தோராட்டத்திற்கு பாதிப்பு இருக்காது: மெட்ரோ திட்ட மேலாண்மை இயக்குனர் தகவல் Representative Image.

மதுரை மெட்ரோ சுரங்க பாதை வழித்தடத்தால் மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு பாதிப்பு இருக்காது என மெட்ரோ திட்ட மேலாண்மை இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 8500 கோடி மதிப்பில் 32 கி.மி தூராத்திற்கு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்குவதற்கான இறுதி கட்ட அறிக்கை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமையில் நெடுஞ்சாலை, மாநகராட்சி, வருவாய்துறை, இந்து அறநிலையத்துறை, தொல்லியல் துறை, நில அளவைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜூனன் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மெட்ரோ திட்ட மேலாண்மை இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை மெட்ரோ திட்டத்திற்கான வரைவு திட்ட அறிக்கை நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்த கூட்டத்தில் விரிவான அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

திட்ட அறிக்கை வரும் ஜூலை 15ஆம் தேதி தமிழக அரசிடம் வழங்கவுள்ளோம். 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமையவுள்ளது இதில் 5 கி.மி தூரம் சுரங்கபாதை வழித்தடமும், மீதி தூரத்திற்கு மேல்மட்ட வழித்தடமும் அமைக்கப்படவுள்ளது. 32 கிலோ மீட்டர் தூரத்தில் 27 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன இதில் 3 ரயில் நிலையங்கள் சுரங்கபாதை ரயில்நிலையமாக இருக்கும்.

இவை நகரின் மையப்பகுதியான பெரியார் பேருந்து நிலையம் , மீனாட்சியம்மன் கோவில், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் சுரங்கபாதை நிறுத்தமாக அமையும். இந்த திட்ட அறிக்கையை அடுத்து மத்திய அரசின் அனுமதி பெற்று திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே ஆவணி மூல வீதி பகுதியில் மெட்ரோ ரயில் நிறுத்தம் அமைப்பது குறித்து திட்டமிட்டுள்ளோம்.

மெட்ரோ ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிகளால் தேரோட்ட நிகழ்ச்சியின் போது எந்த பாதிப்பு இருக்காது எனவும், 32 கிலோ மீட்டரில் உயர்மட்ட வழித்தடம் அமைக்க 3 ஆண்டுகளும், சுரங்கவழிப்பாதை வழித்தடங்கள் அமைக்க 4 ஆண்டுகள் காலமும் ஆகும். அதன்படி 2027 ஆம்ஆண்டில் பணிகள் நிறைவுபெற சாத்தியகூறு உள்ளது.ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு நிறுத்தம் என்ற அடிப்படையில் திட்ட அறிக்கையை தயாரித்துள்ளோம்.

மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையே இதுவரையிலும் விரைவாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஆகும், கோவை மதுரை ஆகிய இரு மெட்ரோ திட்ட அறிக்கைகளும் 15 ஆம் தேதி சமர்பிக்கவுள்ளோம், வைகை ஆற்று பகுதியில் 10மீட்டர் ஆழத்தில் கீழ் மெட்ரோ ரயில்வழித்தடம் அமைக்கப்படும் இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. டிரில்லிங் இயந்திர முறையில் சுரங்கபாதை மெட்ரோ வழித்தடம் உருவாக்கும் போது பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது.

மாநகராட்சி பகுதிகளில் மக்கள் நெருக்கடியுள்ள பகுதிகளில் மெட்ரோ பணிகளை பொதுமக்களுக்கு இடையூறின்றி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதே போன்று மாநகராட்சி பெரியார் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகளின் போது மெட்ரோ பணிகளும் நடைபெறுவதால் எந்த பாதிப்பும் இருக்காது. ஏற்கனவே திட்ட அறிக்கை தயாரிப்பின் போது 31.30 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடமும், 26 நிறுத்தங்களும் அமைக்கப்படும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இறுதி கட்ட விரிவான திட்ட அறிக்கையில் 32 கிலோ மீட்டர் தூரத்தில் 27 நிறுத்தங்கள் உருவாக்கப்படும் எனவும் சித்திக் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்