Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சரின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் தெரியவந்த காரணம்..

Nandhinipriya Ganeshan September 27, 2022 & 11:00 [IST]
அமைச்சரின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் தெரியவந்த காரணம்..Representative Image.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த சகோதரரான பி.கே.தேவராஜ் (வயது 62), சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 2 மகன்களும் பட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் அவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைகாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் பி.கே. தேவராஜ், கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. எனினும், தற்கொலைக்கான காரணம், விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சருக்கு சொந்தமானவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் அவரது இல்லம் முன்பு கூடி இருந்தனர். அமைச்சரின் உடன் பிறந்த அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்