Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மும்பை – சோலாப்பூர் வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Mumbai - Solapur Vande Bharat Train

Gowthami Subramani Updated:
மும்பை – சோலாப்பூர் வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Mumbai - Solapur Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆனது, இந்தியாவின் இரண்டாவது அதிவேக ரயில் ஆகும். முதலாவது இடத்தில் இருப்பது கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகும். வந்தே பாரத் ஆனது ரயில் 18 எனவும் அழைக்கப்படுகிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wi-Fi வசதி, GPS, ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

கடந்த பிப்ரவரி 10, 2023 அன்று இந்தியாவின் 9 ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாக மும்பை முதல் சோலாப்பூர் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதே பாதையில் செல்லக்கூடிய மற்ற இரயில்களை விட மிக விரைவாகவே சென்றடைந்து விடுகிறது. இந்த பதிவில் மும்பை – சோலாப்பூர் வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிவரங்களைப் பார்க்கலாம்.

வழி

இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் மற்ற அனைத்து நாள்களும் இயக்கப்படுகிறது. மும்பை – சோலாப்பூர் செல்லும் இந்த வந்தே பாரத் ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரு (Mumbai CSMT), தாதர், கல்யாண் ஜங்ஷன், புனே ஜங்ஷன், குர்துவாடி ஜங்ஷன், சோலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். பொதுவாக மும்பை – சோலாப்பூர் பயண நேரம் ஆனது பயணம் செய்யும் இரயில்களைப் பொறுத்து மாறுபடும். அதன் படி 7 மணி 55 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், வந்தே பாரத் ரயில் 6 மணி 35 நிமிடத்திலேயே சென்று விடுகிறது.

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

மும்பை CSMT – சோலாப்பூர் [எண்: 22225]

 

சோலாப்பூர் – மும்பை CSMT [எண்: 22226]

பிப்ரவரி 10, 2023

புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

452 கிமீ

6 மணி 35 நிமிடம்

04.05 PM – 10:40 PM

 

06.05 AM – 12:35 PM

 

மும்பை CSMT – சோலாப்பூர் வந்தே பாரத் நேர அட்டவணை [எண்: 22225]:

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரு ஜங்ஷனில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் [22225] மாலை 4.05-மணிக்கு புறப்பட உள்ளது. இந்த இரயில் ஆனது தாதர் ஜங்ஷனுக்கு 04.15-க்கு வந்தடைந்து, மாலை 04.17-க்கு புறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கல்யாண் ஜங்ஷனுக்கு மாலை 04.53 மணிக்கு வந்தடைந்து, மாலை 04.55 மணிக்கு புறப்படுகிறது. மேலும், புனே ஜங்ஷனுக்கு இரவு 07.10 மணிக்கு வந்தடையும் இந்த இரயில் இரவு 07.15 மணிக்கு புறப்படுகிறது.  மேலும், குர்துவாடி ஜங்ஷனுக்கு இரவு 09.36-க்கு இந்த இரயில் வந்தடைகிறது. பிறகு இரவு 09.38-க்கு புறப்படும் இந்த இரயில் சோலாப்பூருக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடைகிறது.

மும்பை CSMT – சோலாப்பூர் [எண்: 22225]

 

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரு (Mumbai CSMT)

-

16:05

தாதர்

16:15

16:17

கல்யாண் ஜங்ஷன்

16:53

16:55

புனே ஜங்ஷன்

19:10

19:15

குர்துவாடி ஜங்ஷன்

21:36

21:38

சோலாப்பூர்

22:40

-

 

சோலாப்பூர் – மும்பை CSMT வந்தே பாரத் நேர அட்டவணை [எண்: 22226]:

சோலாப்பூரிலிருந்து மும்பை-க்கு செல்லும் வந்தே பாரத் ரயில் [22226] ஆனது, சோலாப்பூரில் இருந்து காலை 06.05 மணிக்கு புறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காலை 06.53 மணிக்கு குர்துவாடி ஜங்ஷனுக்கு வந்தடைந்து காலை 06.55 மணிக்கு புறப்பட்டு புனே ஜங்ஷனுக்கு காலை 09.15 மணிக்கு வந்தடைகிறது. மேலும், புனே ஜங்ஷனில் இருந்து 09.20-க்குப் புறப்பட்டு கல்யாண் ஜங்ஷனுக்கு காலை 11.33 மணிக்கு வந்தடைகிறது. இதனைத் தொடர்ந்து, காலை 11.35 மணிக்கு கல்யாண் ஜங்ஷனில் இருந்து தாதர் ஜங்ஷனுக்கு மதியம் 12.12 மணிக்கு வந்தடைகிறது. இதனைத் தொடர்ந்து, மதியம் 12.14 மணிக்கு புறப்பட்டு மும்பை CSMT-க்கு 12.35 மணிக்கு வந்தடைகிறது.

சோலாப்பூர் – மும்பை CSMT [எண்: 22226]

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

சோலாப்பூர்

-

06:05

குர்துவாடி ஜங்ஷன்

06:53

06:55

புனே ஜங்ஷன்

09:15

09:20

கல்யாண் ஜங்ஷன்

11:33

11:35

தாதர்

12:12

12:14

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரு (Mumbai CSMT)

12:35

-

 

கட்டணம்

மும்பை CSMT – சோலாப்பூர் [எண்: 22225] மற்றும் சோலாப்பூர் – மும்பை CSMT [எண்: 22226] போன்ற வந்தே பாரத் இரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் ஆனது பயண வகுப்புகளைப் பொறுத்தும், உணவுக் கட்டணத்தைப் பொறுத்தும் மாறுபடும். அதன் படி, மும்பை CSMT-யில் இருந்து, சோலாப்பூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலின் சேர் கார் மற்றும் எக்ஸ்கியூட்டிவ் கட்டணம்

 

வந்தே பாரத் இரயில்

உணவு கட்டணம் இல்லாமல்

உணவு கட்டணம் சேர்த்து

சேர் கார் கட்டணம்

எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம்

சேர் கார் கட்டணம்

எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம்

மும்பை CSMT – சோலாப்பூர் [எண்: 22225]

ரூ.1,100

ரூ.2,105

ரூ.1,300

ரூ.2,365

சோலாப்பூர் – மும்பை CSMT [எண்: 22226]

ரூ.1,010

ரூ.2,015

ரூ.1150

ரூ.2185

             

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்