Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

விடாமல் துரத்தும் கருப்பு உருவம்...மாடியில் இருந்து குதித்த மாணவி...திக் திக் பின்னணி!

Priyanka Hochumin November 17, 2022 & 11:30 [IST]
விடாமல் துரத்தும் கருப்பு உருவம்...மாடியில் இருந்து குதித்த மாணவி...திக் திக் பின்னணி!Representative Image.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை விட திகிலான விஷயம் அந்த மாணவி விசாரணையின் போது சொன்ன வாக்கு மூலம் தான். போலீசே திகைத்து போயிட்டாங்கன்னா பாத்துக்கோங்க, இந்த செய்தி பற்றிய முழு விவரமும் பார்க்கலாம்.

தூத்துக்குடி மாவட்டம் சாயபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தூயமேரி மகளிர் மேல்நிலை பள்ளியில் விடுதி வசதியும் உள்ளது. அந்த விடுதியில் படித்து வந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்து பள்ளிக்கு வருகிறார். எதிர்பார்க்காத விதமாக சம்பவத்தன்று காலையில் பள்ளி மைதானத்தில் சக மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த மாணவி மட்டும் தனியாக பள்ளியின் முதல் மாடிக்கு சென்று கீழே குதித்துள்ளார்.

அதனால் அவருக்கு இரண்டு கால் எலும்பிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பின்பு அவரை தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், பிறகு மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் விசாரணை நடத்திய போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த ஒரு மாதமாகவே தன்னை ஒரு கருப்பு உருவம் துரத்தி வருவதாக கூறினால், யார் என்று பார்க்கும் போது அங்கு யாரும் இல்லை என்று மாணவியின் பெற்றோர்கள் கூறினர்.

இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது, சம்பவத்தன்று அந்த கருப்பு உருவம் தன்னுடன் விளையாடியதாகவும் என்னை அது தான் முதல் மாடிக்கு அழைத்துச் சென்றது. அங்கு இருந்து இரண்டு பேரும் குதித்து விளையாடலாம் என்று கூறியது. அதனுடைய பேச்சை கேட்டு நான் கீழே குதித்தேன், ஆனால் அது குதிக்காமல் என்னை ஏமாற்றி விட்டது என்று கூறினால். இப்போ கூட பாருங்க அந்த ஜன்னல் கிட்ட தான் இருக்கு...! என்ன மறுபடியும் விளையாட கூப்பிடுது அங்க பாருங்க அந்த உருவம் தான்...! என்று மாணவி கூறினால். போலீஸ்-க்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போயினர். இந்த வழக்கில் யார் மீது என்ன பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.

எனவே, மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேரடியாக அந்த மாணவியிடம் விசாரித்தார். தற்கொலைக்கு முயன்றதாக 309வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, மன அழுத்தத்தை குறைக்க அந்த மாணவியை மனோ தத்துவ நிபுணரிடம் கவுன்சலிங் அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இப்படி பட்ட சம்பவம் தங்கள் பள்ளியில் நடைபெற்றதால் அங்கு படிக்கும் மாணவிகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் அவர்களின் பெற்றோர்களும் பதற்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்