Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொரோனா பரவல் எதிரொலி:- ராணுவத்தை களமிறக்கிய வடகொரியா..!

Bala May 17, 2022 & 10:12 [IST]
கொரோனா பரவல் எதிரொலி:- ராணுவத்தை களமிறக்கிய வடகொரியா..!Representative Image.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வடகொரியா தனது ராணுவத்தை களமிறக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரும்புத்திரை நாடான வடகொரியாவில் புதிதாக 269,510 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் உத்தரவைத் தொடர்ந்து, தொற்றுநோயின் மையமான தலைநகர் பியோங்யாங்கில் மருந்து விநியோகத்தை மேம்படுத்த இராணுவத்தின் மருத்துவப் படை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மருந்து விநியோகம் தடையில்லாம கிடைக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள், முகக்கவசங்கள் மற்றும் சோதனைக் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை அனுப்புவதற்கு தென் கொரியா பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் வடகொரியா அதனை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வட கொரியர்களுக்கு கொரோனா தாக்கம் குறித்து கவலை இருப்பதாகவும்,  தடுப்பூசி உதவியை ஆதரிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வடகொரியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐநா மற்றும் சர்வதேச உதவிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்றும், மனிதாபிமான உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளதாகவும் அமெரிக்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்